எழுத்தின் அளவு: அ+ அ- அ
OPG சூரிய மின் உற்பத்தி நிறுவன உரிமையாளர் வீட்டில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையின சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக மின்சாரத்துறைக்கு மின்சாரம் கொள்முதல் செய்தது, அரசு அலுவலக கட்டிடங்களுக்கு சூரிய மின் உற்பத்தி கருவிகள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு மூலம் பெறப்பட்ட வருவாயை சட்டவிரோத பண பரிமாற்றம் செய்திருப்பதாக இருந்த புகாரைத் தொடர்ந்து OPG சூரிய மின் உற்பத்தி மற்றும் சூரிய மின் உற்பத்தி கருவிகளை தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகங்கள், போன்ற இடங்களில் நேற்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த சோதனையின் தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக இன்றும் அமலாக துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிஷப் தோட்டத்தில் உள்ள OPG சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் உரிமையாளர் அரவிந்த் குப்தா வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடந்து வருகிறது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாகத் துறையினர் கைது செய்து விசாரித்த போது கிடைத்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து இந்த சோதனையை அமலாக துறையினர் ஓ பி ஜி சூரிய மின் உற்பத்தி நிறுவன உரிமையாளர் மற்றும் அலுவலகங்களில் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.