"காஞ்சனா-4 திரைப்படம் குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி" - ராகவா லாரன்ஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சனா-4 திரைப்படம் குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். காஞ்சானா திரைப்படங்களின் மூன்று பாகங்களும் வெற்றிபெற்ற நிலையில், இத்திரைப்படத்தின் 4வது பாகத்தை உருவாக்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இப்படத்தின் கதாநாயகியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ராகவா லாரன்ஸ், காஞ்சனா-4 திரைப்படம் குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் வதந்திதான் என்றும், விரைவில் ராகவேந்திரா புரொடக்சன் சார்பாக அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்துள்ளார். 

Night
Day