"சாமானியர்கள் படம் பார்க்க வேண்டுமென்றால் டிக்கெட் கட்டணத்தை குறைத்திடுக.." - நடிகர் ராமராஜன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாமானிய ரசிகர்களும் திரையரங்கிற்கு படம் பார்க்க வரவேண்டுமென்றால் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டுமென நடிகர் ராமராஜன் வலியுறுத்தி உள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் டிபிவி திரையரங்கில் நடிகர் ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் 50 நாளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து படத்தில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ராமராஜன் கலந்துகொண்டு, நினைவு பரிசுகளை வழங்கினார். அப்போது, பேசிய அவர், தான் நடித்த 45 படங்களிலும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போன்று சிகரெட் பிடித்தோ, மது குடித்தோ நடித்ததில்லை என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Night
Day