"மாடர்ன் மாஸ்டர்ஸ்" - எஸ்.எஸ்.ராஜமௌலி பற்றி நெட்பிளிக்ஸின் ஆவணப்படம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இயக்குநர் ராஜமௌலியின் திரைத்துறை பங்களிப்பை கூறும் விதமாக மார்டர்ன் மாஸ்டர்ஸ் என்ற ஆவணப்படம் வெளியாகவுள்ளது. பிரம்மாண்டத்தின் மறுஉருவமென கூறப்படும், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி கடந்த 2001ம் ஆண்டு இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அவரது பாகுபலி முதல் பாகம், 2ம் பாகம், RRR உள்ளிட்ட படங்கள் இந்திய சினிமாவை உலகளவில் கொண்டு சென்றது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக மார்டர்ன் மாஸ்டர்ஸ் என்ற பெயரில் ஆவணப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம், அவரது பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகவுள்ளது. இதில், ஜேம்ஸ் காமரூன், ஜோ ரஸ்ஸோ மற்றும் கரன் ஜோஹர் இவரைப் பற்றி பேசியுள்ளனர். 

Night
Day