''கங்குவா'' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று சூர்யாவின் 49 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, படத்தில் இடம்பெற்றுள்ள ஆதி நெருப்பே என்கிற பாடலை வெளியிட்டது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், விவேகா எழுதியுள்ள இப்பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Night
Day