'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்க வேண்டாம் - நயன்தாரா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தன்னை இனி லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாமென நடிகை நயன்தாரா வேண்டுகோள் வைத்துள்ளார். 


இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீங்கள் பலரும் தன்னை லேடி சூப்பர்ஸ்டார்' என்று அன்புடன் அழைத்து வாழ்த்துகிறீர்கள். உங்கள் ஆதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் தன்னை `நயன்தாரா' என்று அழைக்குமாறு குறிப்பிட்டுள்ளார். பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால், சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத்தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்'' என்றும் பதிவிட்டுள்ளார்.

Night
Day