`எமகாதகி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியீடு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

`எமகாதகி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகையான ரூபா கொடுவாயூர் எமகாதகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். இப்படம் ஒரு அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜாதி, காதல், ஆணவப்படுகொலை என அனைத்தையும் பற்றி பேசியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Night
Day