அடுத்த 9 மாதங்கள் சினிமாவில் நடிக்க போவதில்லை- அஜித்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கார் பந்தயம் முடியும்வரை சினிமாவில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அஜித் கூறியிருப்பது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கார் பந்தய பயிற்சியின் போது தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், கார் பந்தயம் முடியும் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு முதல் என்னால் கார் ரேஸில் பங்கேற்க முடியவில்லை. 18 வயதில் கார் ரேஸில் பங்கேற்க தொடங்கினேன். சினிமாவுக்கு வந்ததால் பங்கேற்க முடியவில்லை என்றார். மேலும் அடுத்த 9 மாதங்கள் எந்த படத்திலும் நடிக்கப்போவதில்லை என தெரிவித்த அஜித்குமார், அதன்பின் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை படங்களிலும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கார் பந்தயத்திலும் நடிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். 

varient
Night
Day