அரசுக்கு சொந்தமான உணவகத்தை விலைக்கு கேட்கவில்லை - இயக்குனர் விக்னேஷ் சிவன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான உணவகத்தை தான் விலைக்கு கேட்கவில்லை என இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். 


இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்திற்காக அங்குள்ள விமான நிலையத்தில் படப்பிடிப்பை நடத்த அனுமதி கோர சென்றதாக தெரிவித்துள்ளார். அப்போது, தன்னுடன் வந்த மேலாளர் அமைச்சருடன் உணவகத்தை விலைக்கு வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அது தவறுதலாக இணைக்கப்பட்டு வெளியான மீம்ஸ்கள் வேடிக்கையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day