அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த நடிகர் தனுஷ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராயன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆடி கிருத்திகையையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நடிகர் தனுஷ் கையில் ருத்ராட்ச மாலையுடன் இரு மகன்களோடு வந்து சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவருக்கு கோவில் சார்பில் பிரசாதமும் வழங்கப்பட்டது. நடிகர் தனுஷின் வருகையை அறிந்து பக்தர்கள் செல்ஃபி எடுக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. 

Night
Day