ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம் - ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகள் விடுவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்க, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆருத்ரா மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே. சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதோடு, இந்த வழக்கு தொடர்பாக, அவருக்கு சொந்தமான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏழு வங்கி கணக்குகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் என, ஏழு லட்ச ரூபாயை இரண்டு வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை விடுவிக்க உத்தரவிட்டது.

Night
Day