ஆவணங்களை வழங்க நடிகர் விஷாலுக்கு அவகாசம் அளித்த நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆடிட்டர் கேட்ட ஆவணங்களை வழங்க விஷால் தரப்புக்‍கு அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'விஷால் பிலிம் பேக்டரி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையை திருப்பி செலுத்தாத நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ல் வழக்கு தொடர்ந்தது. இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் ஶ்ரீகிருஷ்ணா என்பவருக்‍கு விஷால் தரப்பினர் ஆவணங்களை அளிக்‍க அவகாசம் அளித்து நீதிபதி ஆஷா, வழக்கு விசாரணையை மார்ச் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Night
Day