ஆஸ்கர் விருதை இழந்தது லாபட்டா லேடிஸ் திரைப்படம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இந்தியா சார்பில் இடம் பெற்றிருந்த லாபட்டா லேடிஸ் திரைப்படம் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது. 


உலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய ஆஸ்கர் விருது பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. 97வது ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் இந்தியா சார்பில், கிரண் ராவ் இயக்கிய  லாபட்டா லேடீஸ் இந்தி திரைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில்,  ஆஸ்கர் 2025-க்கு தகுதியான படங்களின் பெயர்களை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் இன்று வெளியிட்டது. இந்த பிரிவில் மொத்தம் 85 படங்கள் இடம் பெற்றிருந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு 15 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் லாபட்டா லேடீஸ் படம் இடம் பெறவில்லை. இருப்பினும் 'சந்தோஷ்' என்ற மற்றொரு இந்தி திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இடம் பெற்றது.

Night
Day