இசையமைப்பாளராக கதிஜா ரஹ்மான் அறிமுகமாகும் 'மின்மினி' ஆக.9ல் ரிலீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இயக்குநர் ஹலிதா சமீம் இயக்கத்தில் உருவான மின்மினி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. சில்லுக் கருப்பட்டி, ஏலே உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹலிதா சமீம் தற்போது மின்மினி எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். ஃபீல் குட் பாணியில் உருவான இத்திரைப்படத்தில் பிரவீன் கிஷோர், எஸ்தர் அனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், கதையின் தேவைக்காக 7 வருடங்களுக்குப் பின்னர் மீதமுள்ள படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இத்திரைப்ப்டம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

varient
Night
Day