இட்லி வடை ராம்சரண் என கிண்டல் : ஷாருக்கானுக்கு பலரும் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அம்பானி இல்ல திருமணத்துக்கு முந்தைய விழாவில் நடிகர் ராம்சரணை கேலி செய்யும் விதமாக ஷாருக்கான் பேசியதற்கு ஒப்பனை கலைஞர் ஷெபா ஹசம் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்பானி இல்ல திருமண விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர்கான் நடனம் ஆடி பார்வையாளர்கள் மகிழ்வித்தனர். அப்போது ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்த ராம் சரணை நடனமாட ஷாருக்கான் அழைத்த விதம் சர்ச்சை ஆகியுள்ளது. இட்லி வடை ராம் சரண் எங்கே இருக்கிறாய் என கிண்டலாக ஷாருக்கான் அழைத்தது அவமரியாதையான செயல் என ஒப்பனை கலைஞர் ஷெபா ஹெசம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நெட்டிசன்களும் ஷாருக்கானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Night
Day