இந்தியன்-2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, சித்தார்த், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் நாளை உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான லைகாவின் கோரிக்கையை ஏற்று இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Night
Day