இளையராஜா பாடல்கள் வழக்கு விசாரணையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுப்பிரமணியன் விலகியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என எக்கோ நிறுவனத்தின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி ஆர்.சுப்ரமணியன் தெரிவித்தார். மேலும், வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

varient
Night
Day