உத்தரப்பிரதேசம் : காவலர் பணிக்கான ஹால் டிக்கெட்டில் சன்னி லியோனின் புகைப்படம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் காவலர் பணிக்கான போட்டித்தேர்வில் நடிகை சன்னி லியோனின் பெயர், புகைப்படத்துடன் ஹால் டிக்கெட் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 60 ஆயிரத்து 244 காவலர் பணியிடங்களான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஒன்றில் நடிகை சன்னி லியோனின் பெயர், புகைப்படம் இருப்பது போன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. அதில், கன்னோஜ்ஸ் ஸ்ரீமதி சோனஸ்ரீ நினைவு பெண்கள் கல்லூரி தேர்வு மையமாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, யாரோ சன்னி லியோனின் பெயர், புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்துள்ளனர் என்றும், சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day