உலகம் முழுவதும் ரூ. 81.8 கோடி வசூலித்து ‘மகாராஜா' திரைப்படம் சாதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மகாராஜா’ திரைப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய் 81.8 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படம் ரூபாய் 20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த  திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 10 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூபாய் 81.8 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

varient
Night
Day