என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம் - ரஜினிகாந்த் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லால்சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால்சலாம் திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு அன்பு சலாம் என்றும், லால்சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக பதிவிட்டுள்ளார். 

Night
Day