ஓடிடியில் வெளியானது கங்குவா திரைப்படம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மிகவும் எதிர்பார்க்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான கங்குவா திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கலவையான வரவேற்பை பெற்றது. 350 கோடி ரூபாய் மதிப்பில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெறும், 110 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் கங்குவா திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.  

Night
Day