கல்கி 2898 ஏடி' படம் இந்தியில் ரூ.200 கோடியை நெருங்கியதாக தகவல்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கல்கி 2898 ஏடி திரைப்படம் இந்தியில் மட்டும் 200 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி திரைப்படம் கடந்த 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கல்கி 2898 ஏடி வெளியான முதல் நாளில் இருந்து வசூலை குவித்து வருகிறது. இப்படம் இந்தியில் மட்டும் 10 நாட்களில் 200 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day