கள்ளழகர் கோவிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை கள்ளழகர் கோவிலில் மனைவியுடன் வந்து சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயனிடம் செல்பி எடுக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டனர். மேலூர் அருகே பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். கள்ளழகர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மலை மீதுள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலிலும் தரிசனம் செய்தார். பின்னர் காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி சென்று அரிவாளை காணிக்கையாக வழங்கினார். இதனிடையே சிவகார்த்திகேயன் வந்த தகவல் பரவியதை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டினர். 

Night
Day