குலதெய்வ கோவிலில் வழிபட்ட நடிகர் தனுஷ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் வரும் 26ம் தேதி வெளியாகிறது. இதனால் படம் வெற்றி பெற வேண்டி தேனியில் உள்ள குலதெய்வ கோவிலில் நடிகர் தனுஷ் வழிபாடு செய்தார். முன்னதாக ஆண்டிபட்டியில் உள்ள கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் பின்னர் சங்கராபுரத்தில் உள்ள கருப்பசுவாமி கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். அவருடன் தந்தை கஸ்தூரிராஜா, தாயார் விஜயலட்சுமி, அண்ணன் செல்வராகவன் ஆகியோர் உடன் வழிபட்டு மகிழ்ந்தனர்

Night
Day