குழந்தைகளை காக்க "Parent Geenee"செயலி - அறிமுகப்படுத்திய நடிகர் மாதவன்

எழுத்தின் அளவு: அ+ அ-

குழந்தைகளின் டிஜிட்டல் சாதனங்களை கட்டுப்படுத்தும் வகையிலான Parent Geenee டிஜிட்டல் செயலியை நடிகர் மாதவன் அறிமுகப்படுத்தினார். 

அமெரிக்காவை தளமாக கொண்ட Parent Geenee என்னும் நிறுவனம், பெற்றோர் இருந்த இடத்தில் இருந்து குழந்தைகளின் டிஜிட்டல் சாதனங்களை கட்டுப்படுத்தும் வகையிலான Parent Geenee என்ற டிஜிட்டல் செயலியை அறிமுகப்படுத்தியது. இதன் தொடக்க விழா, சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகரும், முதலீட்டாளருமான மாதவன் கலந்து கொண்டு Parent Geenee டிஜிட்டல் செயலியை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாதவன், செல்போன் பயன்பாடு மற்றும் சமூக வலைத்தளங்கள் தாக்கத்திலிருந்து குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்காக இந்த செயலி பயன்படும் என தெரிவித்தார்.

Night
Day