கோவை: வணிக வளாகமாக மாறும் டிலைட் திரையரங்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்னிந்தியாவின் முதல் திரையரங்கான, நூற்றாண்டைக் கடந்த கோவை டிலைட் திரையரங்கத்தை, 
வணிக வளாகமாக மாற்றுவதற்கு இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் முதன்முதலில் கோவையில் தான் ஸ்டுடியோக்களும், சினிமா தியேட்டர்களும் உருவாக்கப்பட்டன. அப்படி தென்னிந்தியாவில் முதன் முதலாக  உருவாக்கப்பட்ட சினிமா தியேட்டர் தான் வெரைட்டி ஹால் என்றழைக்கப்படும் இன்றைய டிலைட் திரையரங்கம். கடந்த 1914ஆம் அண்டு இந்த திரையரங்கம் சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவரால் கட்டப்பட்டு முதன் முதலில் வள்ளித் திருமணம் படம் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டது.  தற்போது இதனை வணிக வளாகமாக மாற்ற ஏதுவாக இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

varient
Night
Day