சமோசா விற்பனை செய்யும் பெண்ணுக்கு ஆட்டோ பரிசளித்த நடிகர் பாலா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சமோசா விற்பனை செய்யும் பெண் தொழிலாளி ஒருவருக்கு நடிகர் பாலா, நடிகர் ராகவா லாரன்சுடன் இணைந்து ஆட்டோ ஒன்றை பரிசளித்துள்ளார். சின்னத்திரை மூலம் பிரபலமடைந்த நடிகர் பாலா ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கான காப்பகங்கள் நடத்தி வருகிறார். மேலும், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் தொடர்ச்சியாக செய்து வரும் பாலா, கணவரை இழந்து மின்சார ரயிலில் சமோசா விற்பனை செய்யும் பெண் ஒருவருக்கு ஆட்டோ ஒன்றை பரிசளித்துள்ளார். மேலும், அந்த ஆட்டோவை வாங்க தனக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பாதி பணம் அளித்து உதவியதாகவும் பாலா தெரிவித்துள்ளார். அந்த, வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

varient
Night
Day