சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை படத்தின் 2 பாகங்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெதர்லாந்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை திரைப்படத்தின் 2 பாகங்களும் திரையிடப்பட்ட பின், அனைவரும் 15 நிமிடங்கள் எழுந்து நின்று கை தட்டினர். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை 2ம் பாகம் குறித்த வெளியான அறிவிப்புகள் ரசிகளிடையே மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதனிடையே நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை படத்தின் 2 பாகங்களும் திரையிடப்பட்டன. இதனை கண்டு ரசித்த பொதுமக்கள் சுமார் 15 நிமிடங்கள் எழுந்து நின்று உற்சாகத்துடன் கை தட்டினர். 

Night
Day