சார்ப்பட்டா-2 படத்திற்கு தயாராகும் நடிகர் ஆர்யா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ஆர்யா சார்ப்பட்டா-2 படத்திற்காக குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில், நடிகர் பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து, இப்படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதற்காக, நடிகர் ஆர்யா தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும், இப்படத்திற்காக அவர் தீவிரமாக குத்துச் சண்டை பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

varient
Night
Day