சினேகம் பவுண்டேஷன் பெயரில் போலி ஆவணம்... ஜெயிலில் நடிகை ஜெயலட்சுமி...

எழுத்தின் அளவு: அ+ அ-

சினிமா பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரின் பேரில் பா.ஜ.க.பிரமுகரும், தொலைக்காட்சி நடிகையுமான ஜெயலட்சுமி போலீசாரால் கைது செய்யப்பட்டார்... சினேகனுக்கும், நடிகை ஜெயலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட காரணம் என்ன? ஏன் ஜெயலட்சுமி கைதானார் என்பது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சினிமா பாடலாசிரியரும் மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகியுமான சினேகன் கடந்த 2022ஆம் ஆண்டு,  சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்தார்...

அதில் "சினேகம் பவுண்டேஷன்" என்ற தனது அறக்கட்டளை பெயரில் நடிகை ஜெயலட்சுமி இணையதளம் மற்றும் சமூக வலைதள கணக்குகள் தொடங்கி பொதுமக்களிடம் பணம் வாங்கி வருவதாகவும், இதனால் தனக்கும் தன்னுடைய அறக்கட்டளைக்கும் களங்கம் ஏற்பட்டு வருவதாகவும் சினேகன் குறிப்பிட்டிருந்தார்...

சினேகன் புகாரளித்த இரு நாள்களுக்கு பின்னர் பாஜக மாநில மகளிர் அணி துணைத் தலைவியும் நடிகையுமான ஜெயலட்சுமி, காவல் ஆணையர் அலுவலகத்தில் பாடலாசிரியர் சினேகன் மீது குற்றம் சுமத்தி புகார் அளித்தார்...

நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரிலும் 'சிநேகம் பவுண்டேஷன்' தனக்கு தான் சொந்தம் எனவும், அதன் மூலம் பல ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வருவதாக தெரிவித்ததுடன், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்...

ஒருவருக்கொருவர் மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகம், திருமங்கலம் காவல் நிலையம் என புகார் அளித்ததுடன், நீதிமன்றத்திலும் இருவரும் வழக்கு தொடுத்தனர். 

2022 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார், நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்....

அதே போல தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக பாடலாசிரியர் சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவுபடி 2022 அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திருமங்கலம் போலீசார் பாடலாசிரியர் சினேகன் மீது அவதூறு பரப்புதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்...

இந்நிலையில் நடிகை ஜெயலட்சுமி புகாரில் போதிய முகாந்திரம் இல்லை எனக்கூறி நீதிமன்றம் முடித்து வைத்தது...

சினேகன் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான ஜெயலட்சுமி மீது போடப்பட்ட வழக்கின் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தினர்...

'சினேகம் பவுண்டேஷன்' குறித்தான ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்த திருமங்கலம் போலீசார், அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள நடிகை ஜெயலட்சுமியின் வீட்டுக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்...

பின்னர் விசாரணைக்காக நடிகை ஜெயலட்சுமியை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், விசாரணைக்கு பின் அவரை கைது செய்தனர்...

சினேகம் பவுண்டேஷன் தமக்கு சொந்தமானது என்பது போல மோசடியான ஆவணங்களை உருவாக்கியதால், நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது...

Night
Day