எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக இசையமைப்பாளர் இளையராஜா லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். "Incredible" இந்தியா மாதிரி, தான் "Incredible" இளையராஜா என்றும் சென்னை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார்.
வரும் 8ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் தனது முதல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் இளையராஜா நிகழ்த்த உள்ளார். வேலியன்ட் எனும் தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள சிம்பொனியை நேரடியாக அரங்கேற்றும் பணிகளில் இளையராஜா தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். இதற்காக அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரடியாக சந்தித்தும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக இசையமைப்பாளர் இளையராஜா லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையம் பேட்டி அளித்த இளையராஜா, சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது தனக்கான பெருமை அல்ல என்றும், நாட்டின் பெருமை என்றும் கூறினார். மேலும் Incredible இந்தியாவைபோல், தான் Incredible இளையராஜா என்றும் கூறினார்.