சிறுவன் ஸ்ரீதேஜ் குறித்து தான் ஆழ்ந்த கவலையுடன் இருக்கிறேன் - அல்லு அர்ஜூன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புஷ்பா-2 சிறப்பு காட்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல் நிலை குறித்து நடிகர் அல்லு அர்ஜூன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


கடந்த 4ஆம் தேதி, ஹைதராபத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் புஷ்பா-2 சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது, அங்கு அல்லு அர்ஜூன் வருவதாக தகவல் வெளியானது. இதனால், ரசிகர்கள் கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்த பெண்ணின் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சிறுவன் ஸ்ரீதேஜ் குறித்து தான் ஆழ்ந்த கவலையுடன் இருப்பதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார். மேலும், சிறுவனின் குடும்பத்தை விரைவில் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார் 

Night
Day