சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லண்டனில் இன்று சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்ற உள்ள இசைஞானி இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இசைஞானி இளையராஜா இன்று லண்டனில் தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்ற உள்ளார். உலகின் தலைசிறந்த இசைக் குழுவான Royal பில்கார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் ஏற்பாட்டில் அங்குள்ள அப்போலோ அரங்கில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதனை முன்னிட்டு இசைஞானி இளையராஜாவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைதளத்தில் இளைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 'பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி  படைக்கிறது.   சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்' என்று பதிவிட்டுள்ளார். 

Night
Day