எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் வியாசர் நலச்சங்க அறக்கட்டளையின் சங்கமத் தொடக்க விழா நடைபெற்றது. வியாசர் நலச்சங்க மேலாண்மை அறங்காவலர் கே.மாணிக்கம் தலைமை தாங்கினார்.
சென்னையில் வியாசர் அறக்கட்டளையின் ஆன்லைன் இணைய செயலி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சேர்மன் ஜி.பி.சாமி, அறங்காவலர் கே.மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், முதல் செயலியை வெளியிட, அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க தேசிய தலைவர் முனைவர் கோ.பெரியண்ணன் பெற்றுக் கொண்டார்.
வியாசர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிலிக்கப்பட்டது. திரைப்பட இயக்குநர்கள் சுராஜ், ரவிக்குமார், ராஜா, தர்மராஜ், முருகன், சகாதேவன், கஜேந்திரன்,
திருமதி விஜயலட்சுமி உட்பட அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க தேசிய பொதுச்செயலாளர் இதய கீதம் இராமானுஜம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பொருளாளர் ஆர்.வெங்கடேசன் தொடக்க உரையாற்றினார். அறங்காவலர் டில்லிபாபு, ஜெகதீசன் ஆகியோர் தலா 1 லட்சம் ரூபாய் மற்றும் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர். துணைத்தலைவர் துபாய் வி.ராஜேந்திரன் பரப்புரையும், ஊடகத்துறைச் செயலாளர் ஆர்.சிவக்குமார் செயல் விளக்கவுரையும், துணைச் செயலாளர் எம்.ஜி.ராமச்சந்திரன், சமூக சேவை செயலாளர் டி.ராஜாராமும், வாழ்த்துரை வழங்கினர்.
வியாசர் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் பஹ்ரைன் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜி.பி.சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழா நிறைவில் துணைத்தலைவர் ஏ.சி.முருகேசன் நன்றி கூற, அறங்காவலர்கள் டில்லிபாபு, ஜெகதீசன் ஆகியோர் வியாசர் அறக்கட்டளையின் அனைத்து அறங்காவலர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.