சைஃப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவத்தில் நடந்தது என்ன

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேச இளைஞரிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 16 ஆம் தேதி மும்பை பாந்த்ரா இல்லத்தில் ​​சைஃப் அலி கானை கத்தியால் குத்திய வங்கதேசத்தை சேர்ந்த முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பரை, நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பின் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இன்று அதிகாலை தேசிய கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கு முகமது ஷரிபுல்லை அழைத்து வந்த போலீசார், குற்றச் செயலில் ஈடுபட்டது குறித்து மீண்டும் நடித்து காட்டச் சொல்லி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். சைஃப் அலி கானை கத்தியால் குத்திய பின்னர், அவரது இல்ல தோட்டத்தில் முகமது ஷரிபுல் இரண்டு மணி நேரம் மறைந்திருந்து, அங்கு நடந்ததை நோட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

Night
Day