தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.


விக்ரம் பிரபு நடித்துள்ள வாகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ரன்யா ராவ். இந்நிலையில் துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த இவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கநகை, தங்க பிஸ்கட்டை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியதில், ரன்யா ராவிடம் இருந்து 14.80 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் துபாயில் இருந்து சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவர, கைது செய்யப்பட்டார்.

Night
Day