தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் தானும் தனது கணவர் விகேஷ் சிவனும் பாதிக்கப்பட்டதாக நடிகை நயன் தாரா பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக அந்நிகழ்வின் விடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த திருமண ஆவணப்படம் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதன் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் பயன்படுத்தப்பட்ட 3 நொடி காட்சிக்கு நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதாக நடிகை நயன் தாரா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 

தங்களது திருமண வீடியோவில் நானும் ரௌடிதான் படத்தின் எந்த ஒரு பாடல்களையும் காட்சிகளையும் உபயோகிக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும் அதனால்தான் இவ்வளவுநாள் இந்தப் பட்ம் வெளியாக தாமதமானது என்றும் வேதனை தெரிவித்தார். தற்போது டிரைலரில் வெளியான 3 நொடி காட்சிக்கு அவர் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டது மிகவும் தவறான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தாங்கள் மேடையில் அன்பை பகிருங்கள் என பேசுவதும் நேரிடையாக இருப்பதற்கும் பல வித்தியாசங்கள் இருப்பதாகவும், சினிமா பின்னணி இல்லாமல் வந்தால் இப்படியெல்லாம் செய்வீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Night
Day