தனுஷ் வழக்கு - நெட்பிளிக்ஸ் மனு தள்ளுபடி

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் தனுஷ் நிறுவனத்திற்கு எதிராக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகை நயன்தாரா திருமண ஆவண படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், நெட்பிளிக்சின் மனுவை தள்ளுபடி செய்தது.

Night
Day