தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவ. 27-ல் தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் தெரிவித்ததை அடுத்து, இருவருக்கும் இடையேயான விவாகாரத்து வழக்கில் வரும் 27ம் தேதி சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து கோரி சென்னை முதன்மை குடும்ப நல நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகாதததை அடுத்து, விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், விவகாரத்து தொடர்பான விசாரணைக்காக நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். அப்போது தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், பிரிந்து செல்வதில் உறுதியாக இருப்பதாகவும், விவகாரத்து வேண்டும் என்றும் இருவரும் கூறினர். இதையடுத்து நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இடையேயான விவகாரத்து வழக்கில் வரும் 27ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Night
Day