திரைத்துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு பெருமைப்படுகிறேன்- நடிகை த்ரிஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திரைத்துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்ததை நினைத்து தான் பெருமைப்படுவதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.


'ஜோடி' உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த நடிகை திரிஷா, மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சாமி, கில்லி, ஆறு உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். கதாநாயகியாக அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்தும், தற்போது வரை தமிழில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில், திரைத்துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு பெருமைப்படுவதாக நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

Night
Day