துபாய் கார் ரேசில் "அஜித்"

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் துபாய் 24H கார் பந்தயம் இன்று தொடங்குகிறது. பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெற உள்ள தகுதிச்சுற்று போட்டிக்காக அஜித்குமார், தனது அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்து கொடுத்த அஜித்குமார், 14 ஆண்களுக்குப்பிறகு கார் பந்தயத்தில் களம்காண்கிறார். இதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் புதிய அணியையும் அவர் உருவாக்கியுள்ளார். 4 பேர் கொண்ட இந்த அணியில் அஜித்குமாரும் ரேசராக இணைந்துள்ளார். 

இந்நிலையில், துபாயில் இன்று தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள 24H கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி களமிறங்குகிறது. இந்த பந்தயத்தில் சராசரியாக 240 கிலோ மீட்டர் வேகத்தில் 24 மணிநேரம் இடைவிடாமல் காரை ஒட்டவேண்டும் என்பதால், அதற்கான பணியில் அஜித் அணியினர் ஈடுபட்ட காட்சிகளும் வெளியாகின.

இதனிடையே, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கும் தகுதிச்சுற்றில் அஜித் அணி களம்காண்கிறது. தொடர்ந்து, நாளை மதியம் ஒரு மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் மதியம் ஒரு மணிக்கு நிறைவடையும் பிரதான சுற்று நடைபெற உள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு பயிற்சியின்போது விபத்தில் சிக்கி காயமின்றி மீண்டு வந்த அஜித், துபாய் கார் பந்தயத்தில் வெற்றிவாகை சூடுவதற்கு சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

varient
Night
Day