நடிகர் "அவர்கள்" ரவிக்குமார் காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புகழ்பெற்ற நடிகர் அவர்கள் ரவிக்குமார் சென்னையில் காலமானார். கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அவர்கள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரவிக்குமார், பகலில் ஓர் இரவு, யூத், ரமணா, லேசா லேசா, சிவாஜி போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். புற்றுநோய் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை காலமானார். வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் ரவிக்குமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் ரவிக்குமார் மறைவுக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

varient
Night
Day