நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ அப்டேட் நாளை மாலை வெளியாகிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் நாளை மாலை வெளியாக இருக்கிறது. அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் 
‍இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாக உள்ளது.

இதன் ஸ்டண்ட் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற வீடியோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்​தியது. இதனிடையே, நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் நாளை மாலை வெளியாக இருக்கிறது. என்றும், இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

Night
Day