நடிகர் கவுண்டமணியின் 'ஒத்த ஓட்டு முத்தையா' படப்பிடிப்பு நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிறிய இடைவெளிக்குப் பின் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடித்து வந்த 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை என பல நகைச்சுவை பட்டாளம் கவுண்டமணியுடன் கை கோர்க்கவுள்ளது.மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக 3 இளம் நடிகைகள் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

varient
Night
Day