நடிகர் சாயாஜி ஷிண்டே உடல் நிலையில் முன்னேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் நடிகர் சாயாஜி ஷிண்டே மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உடல் நலம் தேறி இருப்பதாக வீடியோவை வெளியிட்டார். 

வேட்டைக்காரன், வேலாயுதம், உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த சாயாஜி ஷிண்டே 2000 த்தில் வெளியான பாரதி படத்தில் பாரதியாராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பாக மாரடைப்பு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் தற்போது வெளியிட்ட வீடியோ ஒன்றில் தான் உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

Night
Day