நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரப்படங்களில் நடித்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். கடந்த 16ம் தேதி அந்த இரண்டு நிறுவனங்களின் அலுவலகங்கள், நிறுவன உரிமையாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது 5 கோடியே 90 லட்ச ரூபாயை நடிகர் மகேஷ்பாபுவிற்கு அந்த நிறுவனங்கள் ஊதியமாக வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

varient
Night
Day