நடிகை அமலாபாலுக்கு ஆண் குழந்தை - "இலை" என பெயர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை அமலா பால் தனது ஆண் குழந்தைக்கு இலை என பெயரிட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால் கடந்த 2014ம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேறுபாடால் விவாகரத்து செய்தார். இந்நிலையில், கடந்தாண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் கடந்த ஜனவரி மாதம் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார். இந்நிலையில், தனக்கு கடந்த 11ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தைக்கு இலை என பெயரிட்டுள்ளதாகவும் அமலாபால் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, திரைபிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Night
Day