நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொள்ளும் முன் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை அம்ரிதா பாண்டே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் முன் வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் மூலம் மறைமுகமாக தெரிவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே மும்பையில் வசித்து வந்தார். தனது சகோதரியின் திருமணத்திற்காக, பீகார் மாநிலம் பாகல்பூர் ஜோக்ஸ்ருக்கு சென்றார். அங்கு, குடும்பத்தினருடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தவர் நேற்றி முன்தினம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு சில மணி நேரத்திற்கு முன் தனது வாட்ஸ் அப்பில், தற்கொலை செய்து கொள்ளப்போவதை ஸ்டேட்டஸ் மூலம் மறைமுகமாக பதிவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Night
Day