நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா வீட்டில் ED சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆபாச பட நெட்வொர்க் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் தொழிலதிபரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.


 வெப் சீரிஸ் என்கிற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆபாச பட நெட்வொர்க் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் மும்பையில் உள்ள ராஜ் குந்த்ராவின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

Night
Day