நாக சைதன்யா-சோபிதா ஜோடிக்கு நிச்சயதார்த்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனிடையே, நாக சைதன்யாவும், பொன்னியன் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக செய்திகள் வந்தன. இந்நிலையில், இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Night
Day